அதே இடம் அதே மறியல்.. அட போங்கப்பா.!

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் எதிரே சாந்தி தியேட்டர் முன்பு நேற்று வாலிபர் ஒருவர் பஸ் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார் . தனது இட பிரச்சனைக்கு போலீசில் புகார் அளித்தும் தீர்வு காணவில்லை என அவர் ஆவேசமாக போராடினார். இன்று அதே போல் வாலிபர் ஒருவர் அதே இடத்தில் டவுன் பஸ்ஸை மறித்து திடீர் போராட்டம் நடத்தினார்.

சினிமா தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்கிறார்கள் . எப்படி படம் பார்ப்பது இதை யாரும் தட்டி கேட்பதில்லை என கோபத்தில் அவர் பஸ் செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தார். வழக்கம்போல் போலீசார் அங்கே சென்று மிரட்டி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *