கோவை சுந்தராபுரம் எப்எல்2 பாரில் ‘குடி பிரியர்களுக்கு’ கும்மாங்குத்து…!
சுந்தராபுரம் பார் பைல் படம்… கோவை மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் எப்எல்2 உரிமம் பெற்ற 11 டூ11 செயல்படும் மனமகிழ்மன்ற மதுபான கடை உள்ளது. இன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு இந்த கடையில் குடிபிரியர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பார் ஊழியர்களிடம் மதுபானம் சரியில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர். பாரில் உணவு பொருட்கள் அதிக விலை விற்பனை செய்கிறார்கள். குவாட்டர், பீர் பாட்டிலுக்கு 30…
கோவை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்பு பணி பாதிப்பு…அபேட், பைரித்திரம் எங்கே போச்சு..
ரேஸ் கோர்ஸ் பூச்சியியல் பிரிவில் காட்சி பொருளாய் மருந்துகள்… கோவை மாநகராட்சியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களை முன்னிட்டு டெங்கு, காலரா, டைபாய்டு தடுப்பு பணி என்ற பெயரில் நோய் கிருமி அழிப்பு பணிக்கான வேதிப்பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர் . கடந்த ஆண்டில் மண்டல அளவில், 30 முதல் 40 லட்ச ரூபாய் அளவிற்கு கொசு அழிப்பு மருந்துகளான அப்ட்ே, பைரித்திரம் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் வாங்கப்பட்டது.5 மண்டலங்களில் சுமார் 2 கோடி ரூபாய்…
டீன் ஏஜ் சிறார் பாதிப்பு அதிகரிப்பு…
கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் சிறார் விவகாரம் கையாள்வதில் பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைப்பு இன்றி அலட்சியமாக செயல்படுவதாக இருப்பதாக தெரிகிறது. தவறு நடந்த பின்னர், பாதிப்பிற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கும் அவல நிலை இருப்பதால் டீன் ஏஜ் சிறார்கள் வெகுவாக பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் பெண்கள், சிறார் தொடர்பாக 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் /6 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. 18 முதல் 19…
கோவை அரசு பொருட்காட்சி துவக்கம்…
கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது. இதில் மாநகர போலீஸ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 அரங்குகள், தனியார் சார்பில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அரங்கில் 4 தந்தம், ஒரு காட்டெருமை தலை, 2 சிறுத்தை வடிவமைப்பு மற்றும் சில போட்டோக்கள் வைத்திருந்தனர். அதிகமான பொருட்கள் வைக்க கூடிய இந்த அரங்கம் குப்பை கூளமாக அசுத்தமாக காணப்பட்டது. காஸ் பாரஸ்ட் மியூசியம்,…
கோவை பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் திருடும் கும்பல்…
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இங்கே பாரத் பெட்ரோல், இந்தியன் ஆயில் நிறுவன பிளான்ட் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் பைபாஸ் ரோட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஓரங்கட்டி நிறுத்துவதும். அதில் நூதனமாக பெட்ரோல், டீசல் திருடுவதும் சுடந்த சில ஆண்டாக நடக்கிறது. குறிப்பாக போடிபாளையம் பிரிவில் டீக்கடைகளை ஒட்டி அதிகளவு பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தினமும் இங்கே பேரல், பேரலாக டீசல்,…
வெள்ளலூரில் அகழ்வாராய்ச்சி: பழங்கால பொருட்கள் சேகரிப்பு…
தொல்லியல் துறை சார்பில் கோவை வெள்ளலூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. அகழாய்வின் போது கண்டெக்கப்படும் தொல்பொருட்கள் மற்றும் முக்கிய கலைப்பொருட்களின் பட்டியலை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை வெள்ளலூர் பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த வெள்ளலூர் பகுதி சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மற்றும் நொய்யல் நதிக்கரையோம் அமைந்துள்ள பழமையான…
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு…
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ‘இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000, எஸ்.சி, எஸ்.டி.., பிரிவினருக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன்…
கோவையில் போதை மருந்து ஊசி பதுக்கிய வாலிபர் கைது…
கோவை காந்திபுரம், ராம்நகர் கோகுலம் வீதி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்டூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் போதைக்கு பயன்படுத்தக்கூடிய ‘மெபென்டர்மைன் சல்பேட் மற்றும்…
கோவையில் பணம் கேட்டு 2 வாலிபர்களை கடத்திய ‘போலீஸ் கேங்க் கைது…!
கோவை போத்தனூர் அடுத்த சித்தன்புரம், இந்திரா நகரை நவீன் (29). இவர், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார். கடந்த 8ம் தேதி மதியம், நவீனின் அக்கா பரமேஸ்வரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், “உன் தம்பி நவீனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கூறிவிட்டு இணைப்பை…
கோயம்புத்தூர் பைபாஸ் ரோடு… NOC தர ரயில்வே, கெயில், ஆயில் கம்பெனிகள் தாமதம்…!
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு எல் அண்ட் டி ரோடு என்ற பெயரில் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பைபாஸ் இனி கோயம்புத்தூர் பைபாஸ் என்ற பெயரில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான திட்டங்கள் தயார் செய்த நிலையில், ஒன்றிய அரசின் துறைகள் தடையின்மை சான்று, அனுமதி வழங்குவதில் முட்டுகட்டை போட்டு உட்கார்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை. கடிதங்களை கிடப்பில் போட்டு ஒன்றிய…
