கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் ஓட்டு போடுவதை வலியுறுத்தும் வகையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பணி இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியா மேப் வடிவத்தில் வாக்காளர்கள் நின்று கட்டாயம் 100% வாக்குப்பதிவு செய்வோம் என சபதம் ஏற்கும் வகையில் விழிப்புணர்வு நடத்தினர்.
