Kfc: கோவையில் சிக்கன் பர்கரில் புழு, உணவு பாதுகாப்பு துறை விசாரணை
கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் kfc ஃபுட் கோர்ட் உள்ளது. இந்த கடையில் நேற்று வாலிபர்கள் சிலர் சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிட்டனர்.
அதில் புழு இருந்தது. இது தொடர்பாக வாலிபர்கள் கடை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக வேறு சிக்கன் பர்கர் வழங்கப்பட்டது. இருப்பினும் குழு நெளிந்த சிக்கன் பர்கர் தொடர்பாக வாலிபர்கள் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தனர்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கேஎப்சி உணவு கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் மற்றும் உணவு தயாரிப்பு பொருட்கள் மாதிரியை சேகரித்தனர்.
சிக்கனில் புழு எப்படி வந்தது ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் சிக்கன் சேமித்து வைத்து அதனை பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
