கிருஷ்ண ஜெயந்தி விழா குட்டீஸ்கள் குதூகலம்…
கோவை பிளமேடு கொடிசியா வளாகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஜெகன்நாதர் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தரிசன ஆரத்தி நடைபெற்றது. பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார். ஸ்ரீராதா கிருஷ்ணர் பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அகண்ட நாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் மற்றும்…
