தமிழ் புத்தாண்டு: மருதமலையில் பக்தர்கள் குவிந்தனர்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது.

இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலை பாதையில் அனுமதிக்கப்படவில்லை.

இருசக்கர வாகனங்களில் மட்டும் பக்தர்கள் மலை பாதை வழியாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட அளவு வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி தரப்பட்டது .இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காத்திருப்பு கூடம் எதுவும் இல்லாமல் படிக்கட்டு மற்றும் நடைபாதையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிஇருந்தது .சில பக்தர்கள் வெயில் தாக்கத்தால் சோர்வுடன் காணப்பட்டனர். சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர். அதிக கூட்டம் வரும் நாட்களில் பக்தர்கள் காத்திருக்க போதுமான இடம் ஒதுக்க வேண்டும் .நாற்காலி அமைத்திருக்க வேண்டும் .

குடிநீர் வசதி செய்து தர வேண்டும். தற்போது படிக்கட்டு பாதை சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதி மூடப்பட்டுள்ளது. மிகவும் குறுகலான பகுதியில் பக்தர்களை அடைத்து விடுவதால் சிரமமான சூழ்நிலை இருக்கிறது. இந்து சமய அறநிலைத்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தரிசன வசதிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *