கோவை திருப்பூரில் குவிந்த கூட்டம் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…!

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று கோவை வந்தார்.

மதியம் 1.30 மணி அளவில் பீளமேடு சித்ரா பகுதியில் இருந்து கோல்டு வின்ஸ் வரை வாகனத்தில் ரோடு சோ நடத்தினார்.
அவரைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவருக்கு ரசிகர் சிலர் கட்சி கொடி ,ஜூஸ் பாட்டில் ,பொம்மை போன்றவற்றை தூக்கி வீசினார். போலீஸ் தடையை மீறி ரசிகர்கள் சிலர் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து இரு பக்கத்திலும் துரத்தி ஓடினர்.

கூட்ட நெரிசலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இந்த நிலையில் போலீசார் பாதுகாப்பு கருதி ஜிடி நாயுடு மேம்பாலத்தை மூடிவிட்டனர். பிரச்சார வாகனம் செல்லும் வரை மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்படவில்லை.
கணியூர் டோல்கேட் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது .

அங்கே ஏற்பட்ட நெரிசலில் மேலும் பலருக்கு தொந்தரவு ஏற்பட்டது. இளம்பெண் ஒருவர் தனது 5 பவுன் தங்க நகையை கூட்ட நெரிசலில் தொலைத்துவிட்டார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் நகையை பறித்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் தரப்பட்டது.

பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டம் நெருக்கடியில் சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமாரும் மயக்கம் போடும் நிலைமையில் தள்ளாடினார். ஒரு வழியாக விஜய் கூட்டத்தைக் கடந்து திருப்பூர் பெருமாநல்லூர் சென்றார் . அங்கே பிரச்சார கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை விளக்கி பொது மக்களிடையே பேசினார். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

இதற்கு இடையில் அவர் திருப்பூர் பூலுவபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. நேரமின்மை காரணமாக அந்த பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார்.
கோவை மற்றும் திருப்பூர் பிரச்சார பயணத்தின் போது விஜய் அதிகளவு கூட்டத்தை திரட்டி மாஸ் காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *