Dvac ride: கோவையில் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கிறது.

இந்த அலுவலகங்களில் பணியாற்றும் சில சார்பதிவாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது ஓரிரு நாளில் அதிகாரிகள் புதிய இடங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பத்திரம் பதிவு செய்வதற்கு புரோக்கர்களாக சில டாக்குமெண்ட் ரைட்டர்கள் செயல்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணியிடம் மாறுதல் பெறப்பட்ட சில Sub register officer தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஏற்கனவே பணி செய்து வரும் சார் பதிவாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு செல்லவும் தயாராக இல்லை என கூறப்படுகிறது .

இந்த விவகாரத்தில் போட்டி பொறாமையின் காரணமாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மொத்தமாக புகார் தரப்பட்டதின் அடிப்படையில் இந்த மாஸ் செக்கிங் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த காலங்களில் சார் பதிவாளர் பணியிட மாறுதல் மற்றும் உதவியாளர்கள் பணியிட மாறுதல் செய்வதற்கு லஞ்சமாக பணம் பெறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக வெற்றிக்காக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சம் பெறாமல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான சார் பதிவாளர்கள் ஒரிஜினல் பணியிடங்களில் வேலை செய்யாமல் deputation என்ற அடிப்படையில் வேறு அலுவலங்களில் அதிக காலம் பணியாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு வரை நடந்து சோதனையில் தொண்டாமுத்தூரில் 1.21 லட்ச ரூபாயும் காஞ்சிபுரத்தில் காந்திபுரத்தில் 1.12 லட்ச ரூபாயும் கணக்கில் வராத தொகை என கைப்பற்றப்பட்டது. மாநில அளவில் 34 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 37.75 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *