கோவையில் துணை தலைமை தேர்தல் கமிஷனர் ஓட்டு பதிவு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

இதில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பானு பிரகாஷ் யத்ரு, தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திருப்பூர், ஈரோடு ,நீலகிரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் வரும் 23ஆம் தேதி ஓட்டுப்பதிவு அமைதியாக எந்த வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நடத்த வேண்டும்.
ஓட்டுக்கு பணம் பரிசுபொருள் தருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வேட்பாளரும் பணம் பரிசு பொருள் கொடுத்து ஓட்டு வாங்க கூடாது.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். தேர்தல் முறைகேடுகள் மொத்தமாக தடுக்கப்பட வேண்டும். விதிமுறை மீறலுக்கு யாராவது துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட கட்சியினருக்கு உதவிகரமாக நடக்கக்கூடாது.

கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாரும் கண்டுபிடிக்க வில்லை என தவறு செய்யக் கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *