Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…

கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது.

குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர்.

அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்துவோம். வீடுகள் பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் போலீசாருக்க தகவல் தெரிவிக்க வேண்டும்.

சந்தேக நபர்கள் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் உங்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறது. நீங்கள் எங்களை தயக்கமின்றி தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் அபார்ட்மெண்ட் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் ஏதாவது நடக்கிறதா திருடர்கள் சமூக விரோத செயல்கள் எங்காவது நடக்கிறதா என பொதுமக்களிடம் போலீசார் தகவல் கேட்டனர். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும். நாங்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு ரோந்து பணிக்கு வந்து செல்வோம்.

மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *