தப்பு செஞ்சவங்க ஓட முடியாது ஒளிய முடியாது… கோவையில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி…
கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் இன்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு நடத்தினார்.
விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது
இது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது
மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. அந்த அடிப்படையில் இங்கே சோதனை நடத்தப்பட்டது. உணவை சாப்பிட்டு பார்த்தோம். மாணவியர் தரப்பில் பஸ் வசதி வேண்டும் என கேட்டார்கள்.
விடுதிக்கு வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தெரிவித்தார்கள். மாணவிகள் நலனில் அக்கறை உள்ள அரசு கட்டாயம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும்.
தரம் இல்லா உணவு கொடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டபோது
துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் உணவு விஷயத்தில் இந்த சமரசமும் செய்ய முடியாது.
ஓடவும் முடியாது ஒளியும் முடியாது
இந்த துறை இதுவரை எப்படி இருந்தது என்பது போல இல்லை… இனி புகார்கள் வராத நிலை இருக்கும்..
மாணவிகள் நலனில் அக்கறை உள்ள அரசு இந்த விடுதியில் படிக்கும் மாணவிகளுக்கு வசதிகளை கொடுக்க உள்ளோம். தரம் இல்லா உணவு கொடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு : துறை ரீதியிலான நடவடிக்கை இருக்கும்… இந்த விசயத்தில் எந்த சமரசமும் இல்லை
தவறுகள் செய்தவர்கள் ஓடவும் முடியாது ஒளியும் முடியாது
இந்த துறை இதுவரை எப்படி இருந்தது இனி இருக்காது. மாணவியரிடம் நான் ஏற்கனவே வீடியோ காலில் பேசி என்ன பிரச்சனை என கேட்டு அதை தீர்வு காண உத்தரவிட்டிருந்தேன்.
இனி புகார்கள் வராத நிலை இருக்கும்
பொது சமையல் அறை மூலமாக தரமான உணவு தயாரிக்கப்படுகிறது.
அதனை நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை நீங்களே பாராட்டும் வகையில் இருக்கும்.
பட்ஜெட்டுக்கு பிறகு இன்னும் இந்த துறைக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படும்.
