சிறுத்தையும் கொல்லுவோம்… கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இல்லை. விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தள்ளுபடி திட்டம் இருக்கிறது.

எனவே தமிழக அரசு முறையாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விவசாய கடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் வனவிலங்கு பிரச்சனை, 100 நாள் வேலைத்திட்டத்தின் பாதிப்பு, உர விலை அதிகரிப்பு , டீசல் விலை உயர்வு , குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை இதுவரை நிறைவேற்றவில்லை.

பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடன் கட்ட இயலாத நிலைமையில் தவித்து வருகிறார்கள். எனவே விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாகவும் மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்வதாகவும் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்
ஆனால் குறு விவசாயிகளுக்கு கடன் ஐம்பதாயிரம் மட்டுமே தள்ளுபடி செய்வதாகவும் மற்ற விவசாயிகளுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் , 20 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளார் .

இன்றைய நிலைமையில் குறு விவசாயிகள் கூட ஒரு லட்சத்திற்கும் குறையாமல் கடன் பெற்றுள்ளனர் . ஆகவே தமிழக முதல்வர் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பு எந்த விவசாயிகளுக்கும் பயன் இல்லாத நிலைமையில் இருக்கிறது. விவசாயிகளின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு தேர்தல் வாக்குறுதி படி கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் பேசுகையில்,” கோவை மாவட்டத்தில் வனவிலங்கு பிரச்சினைகளால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காட்டு பன்றிகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன . இந்த காட்டு பன்றிகளை அடிக்க வனத்துறையினர் முன்வரவில்லை.

எனவே விவசாயிகள் ஒன்று சேர்ந்து காட்டு பன்றிகளை அடித்துக் கொல்ல வேண்டும். சிறுமுகை காரமடையில் மேட்டுப்பாளையம் எல்லாம் இப்படித்தான் பண்றாங்க. காட்டுப்பன்றி மட்டுமல்ல காட்டில் இருந்து மான்களும் கூட்டமாக வந்து இப்படித்தான் பயிர்களை நாசம் பண்ணிட்டு இருக்கு. இனி நாங்க பொறுக்க முடியாது. மான்களையும் அடிச்சு விரட்டுவோம்.

சிறுத்தைகளும் தோட்டத்துக்கு வந்து ஆடு மாடுகளை கொன்னு சாப்பிடுது. இத்தனை நாள் பாத்தாச்சு. இனி சிறுத்தையும் அடிச்சு கொல்லுவோம். ஏற்கனவே வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அது இதுன்னு சொல்லி எங்களை மிரட்டிக்கிட்டு இருக்காங்க.
பட்டாசு வச்சி விரட்டினால் அதுக்கும் கேஸ் போடுறாங்க. ஒரு வருஷம் பார்த்தாச்சு இனி எல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது.

வண்டல் பண்ணி எடுக்கறதுக்கு இன்னும் அனுமதி தரல. உடனடியா தர வேண்டும். மழை வரப்போகுது அதுக்குள்ள மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுக்க பர்மிஷன் தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *