கோவையில் வாகனம் மோதி சாய்ந்த சிக்னல்

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ராஜவீதி சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிக்னல் இன்னும் பயன்பாட்டுக்கு கூட கொண்டு வரப்படவில்லை . இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் அந்த கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. வாகனப் போக்குவரத்து தொடர்ந்து இருப்பதால் இந்த சிக்னல் கம்பத்தை போலீசாரால் அகற்ற முடியவில்லை .

வின்சென்ட் ரோடு பகுதியில் இட நெருக்கடி இருக்கிறது. வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. வாகனங்கள் போட்டி போட்டு செல்வதால் இட நெருக்கடியால் கம்பம் மற்றும் சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது .‌ போலீசார் ரோட்டோரா ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் வாகனங்கள் செல்வதற்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *