நாறிப்போச்சு உக்கடம் படகு துறை
கோவை உக்கடம் பெரியகுளம் படகு தறை செயல்படுகிறது இந்த பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது சில இடங்களில் ஆயா ஆகாயத்தாமரைகளை அகற்றி அப்படியே போட்டுவிட்டார்கள். இந்த இடத்தில் அசுத்தம் ஆகி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் படகு நிறுத்தப்பட்ட இடங்களை சுற்றிலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. படகு ஏற செல்லும் ஒரு பாதை அபாய நிலையில் இருப்பதால் மூடப்பட்டது .ஒரே ஒரு பகுதி வழியாக பொதுமக்கள் சென்று வர வேண்டி இருக்கிறது. படகுத்துறையில் பயன்பாட்டில் இருந்த ஒரு படகு பழுதாகி தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருந்த இரும்பு தடுப்புகளையும் உடைத்து விட்டார்கள். பொதுமக்கள் உட்கார வைத்திருந்த பல நாற்காலிகள் உடைந்து போய் காணப்படுகிறது. காதலர்கள் முட்புதர் மற்றும் பாம்பு நடமாட்டம் உள்ள ஆபத்தான இடங்களில் அமர்ந்திருக்க வேண்டி இருக்கிறது. குளத்தின் மற்றொரு பகுதியில் தடுப்பு சுவர்கள் காங்கிரட் ஸ்லாப்புகள் உடைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பகுதிகள் ஆபத்தாக போதை கும்பல் நடமாட்டம் உள்ளதாக காணப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் பல இடங்களில் அவை இயங்காத நிலையில் இருக்கிறது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
