கோவையில் குப்பையாக குவிந்து கிடக்குது வீல் சேர்கள்…

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடோனில் மாற்று திறனாளிகளுக்கான வீல் சேர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தூக்கி வீசி குப்பை போல் குவித்திருப்பதாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாற்று திறனாளிகள் கையால் தள்ளியபடி செல்லும் வகையான வீல்கள் கொண்ட சேர் வழங்க கோரிக்கை மனு வழங்கி வந்தனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீல் சேர் கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் ஒதுக்கீடு படி உரியவர்களுக்கு வழங்காமல் 200க்கும் மேற்பட்ட வீல் சேர்களை குப்பை போல் குவித்திருப்பதாக மாற்று திறனாளிகள் புகார் 2 கூறியுள்ளனர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் நல | பிரிவிலும் சில வீல் சேர்கள் ஆங்காங்கே போடப்பட்டுள்ளது. வளாகத்தில் பயன்பாடின்றி சில வீல் சேர்களை தூக்கி போட்டுள்ளனர். இவற்றை பராமரித்து பயன்படுத்த கூட இந்த துறையினர் முன் வரவில்லை. இது மாற்று திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

One thought on “கோவையில் குப்பையாக குவிந்து கிடக்குது வீல் சேர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *