நேரு ஸ்டேடியம் வ உசி பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை

கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்துவதாகவும். சிலர் வாகனத்தை பாதையில் வைத்து போட்டோ, வீடியோ எடுப்பதாலும் வாக்கிங் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

சிலர் வியாபார கடைகளை பொது இடம், ரோடு, வாக்கிங் பாதையில் வைத்துள்ளனர். இதனால் வாக்கிங் செல்வோருக்கு இடையூறு இருப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். இடையூறாக இருந்த சில கடைகள், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

மைக்கில் கடை நிர்வாகத்தினர் தங்களது கடை எல்லைக்குள் தான் கடை நடத்த வேண்டும். பார்க்கிங் பகுதியை அபகரித்து கடையை நடத்த கூடாது என எச்சரித்தனர். நகரில் பல இடங்களில் இந்த பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை நேரு ஸ்டேடியம் மற்றும் வஉசி பூங்கா பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு

கடைகள், வரி செலுத்திய கடைகளின் அத்துமீறல், தள்ளுவண்டி கடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாநகர போலீசார், மாநகராட்சியினர் நடத்திய ஆய்வில் சில கடைகள் ரோட்டோரம் இடையூறாக இருப்பது தெரியவந்தது. இந்த கடைகள் போக்குவரத்து பாதிப்பு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டது. ரோட்டில் போடப்பட்ட நாற்காலி, டேபிள்கள் அகற்றப்பட்டது. மேலும் விதிகளை மீறினால் கடைகள் காலி செய்யப்படும் என மாநகராட்சியினர், போலீசார் எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *