வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடையில் செயல்படுகிறது. இந்தக் கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக கையாளப்படுவதில்லை . அரிசி லோடு இறக்கும் போது அரிசியை கீழே கொட்டுவது வாடிக்கையாக போய்விட்டது. இந்த அரிசியை சிலர் அப்படியே பொது இடங்கள் மற்றும் ரோட்டில் போட்டு வட்டு செல்வதாக தெரிகிறது.

சில நேரங்களில் இந்த அரிசிகளை ஆடு மாடுகள் சாப்பிடுகிறது. கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியும் முறையாக அளந்து போடாமல் கீழே மேலே கொட்டி வீணாக்கி வருகிறார்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்.

கடைகளில் இருப்பு குறைவாக இருந்தால் அதை சமாளிக்க பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *