கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நோடல் ஆபீசர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது .

இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் கணக்கு பார்வையாளர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் துணை கமிஷனர் தேவநாதன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தேர்தல் பார்வையாளர்கள் தரப்பில் கூறியதாவது:

இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் வேட்பமான தாக்கல் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வேட்பு மனுக்களை வாங்கும் முறை அதிக கூட்டம் இருந்தால் அதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வரிசைப்படி மனுக்களை பெற வேண்டும்.

காலதாமதம் செய்யக்கூடாது. வேட்பமான தாக்கல் செய்யும் இடங்களில் எந்த விதிமுறை கேரளம் நடக்க அனுமதிக்க கூடாது. வேற்றுமணக்கல் பரிசீலனின் போது உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்கள் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக தரும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பாக வாக்காளர் பட்டியல் பிரச்சனை இருந்தால் உதவி உடனடியாக சரி செய்ய வேண்டும் வாக்காளர்கள் சேர்த்து நீக்கம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது. ஓட்டு சாவடிகளை நல்ல முறையில் தயார் செய்திருக்க வேண்டும் அடிப்படை வசதிகள் இருக்கிறதா பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்சிடிவ் வாக்கு சாவடி பகுதிகளில் மக்கள் அச்சமின்றி ஓட்டு போட வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தரப்பில் உத்தரவு வழங்கப்பட்டது.
வேட்பாளர்களின் செலவு கணக்குகளை முறையாக கண்டறிந்து அதை பதிவு செய்ய வேண்டும்.

பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை முற்றிலும் தடுக்க வேண்டும் பொது மக்கள் புகார் அளித்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்த பகுதியிலும் ஓட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது.

தேர்தல் செலவினத்தில் யாருக்கும் சலுகை தரக்கூடாது என இந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *