கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது எப்படி; டீன் விளக்கம்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களில் மழைநீர் புகுவதை தடுக்கவும் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் பெய்த கனமழையால் எம்.எம்.1, எம்.எம்.2 எம்.எம்.3 மற்றும் எம்.எம்.4 ஆகிய பழைய கட்டிடங்களின் தரைத்தள பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, அந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர் மேலும், மருத்துவமனை வளாகத்திலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனை டீன் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர், மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் தோஞ்சலி கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் புகும் பிரச்னை ஏற்படுகிறது. எம்.எம். மற்றும் எம்.எம்.2 கட்டிடங்களின் நுழைவுவாயில்களில் வேகத்தடை போன்ற தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை .
இருப்பினும் எம்.எம்.2 கட்டிடத்தின் மேற்கூரையில் புதிய ஷீட் பொருத்துவதற்காக ஒரு பகுதி திறக்கப்பட்டிருந்தது. பணிகள் முடிவடைவதற்குள் மழை பெய்ததால் அதன் வழியாக தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அங்கிருந்த நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணிகள் முடியும் வரை அந்த பகுதியில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படாது. மேலும், எம்.எம்3 மற்றும் எம்.எம்.4 கட்டிடங்களிலும் வேகத்தடை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வாக உள்ள வராண்டா பகுதிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவிர, வடிகால்களில் உள்ள நீர் வெளியேறும் பாதைகள் முழுமையாக குப்பைகளால் அடைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் அடைப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி வெளியேறுவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கு மருத்துவமனை பராமரிப்பு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி, மாதந்தோறும் வடிகால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருக்கிறோம். அந்த கட்டிடத்தில் இருந்த பிரிவுகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு புதிய கட்டிட வசதிகள் கிடைக்கும் வரை தற்போதுள்ள கட்டிடங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The registration process was so simple and I was playing within minutes. Really love the layout of inyes365.