கோவையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது
கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் கூலி தொழிலாளி. 32 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்வதி( 26) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
பார்வதி தர்பூசணி கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சரத்குமாருக்கு அவர் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி மனைவியிடம் அவர் வாக்குவாதம் செய்து வந்தார். நேற்று பார்வதி கடையில் இருந்தார். அப்போது அங்கே வந்த சரத்குமார் அவரிடம் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு செய்தார் .
தன்னிடம் இருந்த கத்தியால் அவரை குத்த முயன்றார். இதை பார்வதி தடுக்க முயன்ற போது அவரது கையில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் சரத்குமார் அங்கிருந்து சென்று விட்டார் .இது தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.
