கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்களில் ‘கேண்டிடேட் செட்டிங்’ பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது.

மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பேலட் பேப்பர் வந்து வந்துவிட்டது. இன்று சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்ட ஓட்டு மெசின்களில் இந்த பேலட் பேப்பர் பொருத்தி வேட்பாளர் என பெயர் மற்றும் சின்னம் பொருத்துதல் பணி அதாவது கேண்டிடேட் செட்டிங் (candidate setting) பணி மேற்கொள்ளப்பட்டது.

23ம் தேதி தேர்தல் நடத்தும் போது அதற்கு முந்தைய நாள் இந்த மெசின்கள் வெளியே எடுக்கப்படும். மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டு மெசின்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேண்டிடேட் செட்டிங் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

20 சதவீதம் பேப்பர் ரிசர்வ் நிலையில் இருக்கும். அனைத்து ஓட்டு மெசின்களிலும் முறையாக வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்கள் பொருத்தப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *