பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகை: போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவுள்ளனர்.

அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரக்கில் மாற்றம் செய்யப்படும்.

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் யு டர்ன் செய்கு புலியகுளம், இராமநாதபுரம் சிங்காநல்லூர் வழியாக பைபாஸ் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு டைட்டல் பார்க் சந்திப்பில் யு டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும் ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் விமான நிலைய நுழைவாயில் வரை வா தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் மாலை 4 மணிக்கு முன்பாக விமான நிலையம் வரவேண்டும்.

அதற்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்லலாம். 18ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

நாளையும் வரும் 18ஆம் தேதியும் கால் டாக்ஸிகள் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *