கோவை காந்திபுரத்தில் கரூர் குரூப் டோக்கன்…
கோவை காந்திபுரத்தில் ஒட்டுக்கு பரிசு தருவதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக இன்று இரவு புகார் வந்தது.
தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் அங்கே சென்று விசாரித்தனர். சிலரிடம் இருந்து டோக்கன் பெறப்பட்டது. டோக்கன் வீடு வீடாக சிலர் வழங்குவதாகவும் பணம், பரிசு பொருட்கள் விரைவில் தருவதாக கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
டோக்கனில் என்ன பரிசு தருவார்கள் என தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வாக்காளர்கள் மத்தியில் பரிசு பொருட்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சில வீடுகளில் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
இதில் தேர்தல் நெருங்கி வருவதால், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும். இரவு ரோந்து பணிகளை போலீசார் மூலமாக செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
டோக்கன் கொடுத்தது கரூர் குரூப் என தெரியவந்திருக்கிறது. தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விதி வீதியாக பணம் பரிசுப் பொருட்கள் விரைவில் சப்ளை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரூர் ஆட்கள் பல இடங்களில் முகாமிட்டு இருப்பதால் தடையின்றி பணம் பொருட்கள் போய் சேர்ந்து விடும் என கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கூடுதல் பறக்கும் படை மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
