ladies hostel: கோவையில் உரிமம், பாதுகாப்பற்ற மகளிர் தங்கும் விடுதிகளை மூட உத்தரவு…

கோவை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள், அரசு, தன்னார்வ மத தொண்டு நிறுவனங்கள் தொழிற்சாலை நிறுவனங்கள், தனியார் மற்றும் அமைப்புகள் நடத்தும் வீட்டைவிட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் (TamilNadu Hostels and Homes for Women and children Regulation Act 2014) படி பதிவு செய்ய வேண்டும்.

மேலும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், உள்ளுறைவோர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். உரிய ஆவணங்களுடன் தங்களது பணிபுரியும் மகளிர் விடுதி முதியோர் இல்லம் பதிவு செய்யவேண்டும்.

சான்றுகளை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். அனைத்து சான்றுகளும் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். துறைசார்ந்த அலுவலர்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். பாதுகாப்பான இடங்களில் மட்டுமே மகளிர் விடுதி முதியோர் இல்லம் நடத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உரிமம் பெறாத முறைகேடான மகளிர் தம்பும் விடுதிகள் முதியோர் காப்பகங்கள் மூடப்படும். கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாமல் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர் விடுதி, முதியோர் இல்லம் அனைத்தும் Simply Gov Portal (https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx) உரிமம் பெறலாம்.

பதிவு செய்யாத மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் தாரணியிடம் கேட்ட போது, “கோவை மாவட்டத்தில் 316 மகளிர் தங்கும் விடுதிகள் இருக்கிறது. இதில் பல ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 3 விடுதிகள் இன்னும் உரிமம் பெறவில்லை. முதியோர் தங்கும் விடுதிகள் 65 இருக்கிறது. இதில் 3 விடுதிகள் உரிமம் பெறவில்லை.

அனைத்து வசதிகளும் குறிப்பாக பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா, உணவு, சுகாதாரம் என அனைத்து வசதிகளும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பாதுகாப்பான சூழலில் மகளிர் தங்கும் விடுதிகள் இருக்கிறது, “என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *