கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று இமெயில் மூலமாக புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . கலெக்டர் அறை, தேர்தல் பிரிவு மற்றும் பல்வேறு அலுவலக பிரிவுகளில் அதிகாரிகள் சோதனை இட்டனர் .
இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வழக்கமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி புகார் மெயில் வருகிறது. அந்த வகையில் தற்போது ஈமெயில் புகார் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள அதிகாரிகளிடம் விசாரித்த போது இ-மெயிலில் தற்போதுள்ள பெரும்பாலான பத்திரிகைகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் பத்திரிகைகள் மிகவும் மோசமாகிவிட்டது. இது மிகவும் கேவலமானது என சில இடங்களில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி இமெயிலில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் இது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
