கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று இமெயில் மூலமாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . கலெக்டர் அறை, தேர்தல் பிரிவு மற்றும் பல்வேறு அலுவலக பிரிவுகளில் அதிகாரிகள் சோதனை இட்டனர் . இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வழக்கமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி புகார் மெயில் வருகிறது….

Read More