கோவையில் வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்…
கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி இன்று துவங்கியது.
கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக 10 ஜெராக்ஸ் மெசின் வைத்து அனைத்து தொகுதிக்கும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிப்பு பணி நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி வாக்காளர் வழிகாட்டி மேப்பும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 27.44 லட்சம் வாக்காளர் தகவல் சீட்டு 10 சதவீதம் கூடுதல் தாள்களுடன் அச்சடிக்கப்படும்.
விரைவில் இந்த வாக்காளர் தகவல் சீட்டு வீடு வீடாக பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வழங்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். இது தவிர, மாவட்ட அளவில் 4 பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கையேடும் பெறப்பட்டது. இந்த கையேட்டில் எப்படி ஓட்டு போட வேண்டும்.
ஒட்டு போடும் போது வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள், விதிமுறை மீறல் இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண், செயலி குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளது.
