ஓட்டுச்சாவடி சீல், பேட்ச் , ஒஆர்எஸ் பாக்கெட்டுகள் வந்தாச்சு…

கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 3563 ஓட்டு சாவடிகளில் வாக்கு

பதிவு நடக்க போகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 45 வகையான தேர்தல் ஆவணங்கள் வந்திருந்தது. இன்று மேலும் கூடுதலாக 20 வகையான ஆவணங்கள் பெறப்பட்டது.

குறிப்பாக ஒட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் 3563 சீல், பேட்ச், லட்சம் வாக்காளர் கையேடு, 1662 மாதிரி ஓட்டு பதிவுக்கான சீல், வெப் காஸ்டிங் போஸ்டர். ஓட்டு சாவடி அலுவலர், பிஎல்ஓ, தலைமை ஒட்டு சாவடி அலுவலர் போன்ற பதவிகளுக்கான பேட்ச் என 20 வகையான 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதி மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டது.

வாக்காளர்கள் சோர்வு மயக்கம் ஏற்பட்டால் வழங்குவதற்காக 17,815 ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பொருட்கள் பிரதிகள் வாங்கப்பட்டது. நாளை தேர்தல் கமிஷனின் சிறப்பு சப்ளையான அழியாத மை குப்பிகள் வந்து விடும். மேலும் ஓட்டு சாவடிகளுக்கான ரகசிய பேப்பர் வர வேண்டியுள்ளது. இந்த ரகசிய பேப்பர் ஓட்டு பதிவு மெசின், கட்டுப்பாட்டு கருவி, சின்னம் காட்டு கருவியில் ஒட்ட வேண்டும்.

அந்த ரகசிய பேப்பர் ஒட்டி சீல் வைத்தால் தான் அந்த ஓட்டு மெசின் அந்த ஓட்டு சாவடிக்கான சரியான கருவி என தேர்தல் கமிஷன் ஏற்கும். ஓட்டு சாவடிகளுக்கான பொருட்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *