கோயில் முறைகேடு தொடர்பாக விரைவில் நடவடிக்கை :இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தகவல்
கோவை விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆன்லைன் தரிசன டிக்கெட்களை முறையாக வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
இங்கே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. சபரிமலை, திருப்பதி போல் நாம் இங்கே செய்ய முடியாது. இங்கே உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் எவ்வளவு பக்தர்கள் வருகிறார்கள். எவ்வளவு தரிசன டோக்கன் தர முடியும் என ஆய்வு செய்து அதற்கேற்ப திட்டங்கள் செய்யப்படும். திருவண்ணாமலை கோயிலில் திடீரென இவ்வளவு கூட்டம் வந்தது, அந்த கோயிலில் அதிக கூட்டம் என தகவல்கள் வருகிறது.
கிரவுட் மேனேஜ்மெண்ட் திட்டம் கொண்டு வந்து ஆன்லைனில் முறையாக டோக்கன் வழங்கவும், கோயில் வளாகத்தில் கவுண்டர்கள் அமைத்து டோக்கன் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் மக்களுக்காகவும் மாற்று திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலமாக கூட்டம் குவிவதை கட்டுப்படுத்த முடியும்.
கட்டண தரிசனம் இலவச தரிசனம் கடந்த காலங்களில் இருந்தே இருக்கிறது கட்டண தரிசனம் ரத்து என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது. இல்லீகலாக காசு வாங்கி அழைத்து செல்லும் முறை ஒழிக்கப்படும். யாரோ ஒருவர் வந்து தரிசனத்திற்கு அழைத்து சென்றால் வரிசையில் நிற்கும் மக்களின் மன வலியை நினைத்து பார்க்க வேண்டும்.
கரப்சனை கோயில்களில் இருந்து ஒழிக்க வேண்டும். பல்க் டிக்கெட் புக்கிங் இருக்காது வாட்ஸ் அப் மூலமாகவே டோக்கன் வழங்குவது போன்ற கோணங்களில் ஆய்வு செய்கிறோம்.
பரிட்சார்ந்த முறையில் சில கோயில்களில் செய்து பார்த்து படியாக செய்ய முடியும். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை பொறுத்த வரை நான் நிர்வாக பணி என்னவோ அதை பார்த்து கொண்டிருக்கிறேன். திமுக மாதிரியில் தவெக செயல்படுகிறதா என்ற கேள்விக்கு இந்த விசயத்தை பொறுத்தவரை தமிழக முதல்வர் நிலைப்பாடு தெரிந்து அறிவிப்பார்கள்,
நான் நிர்வாக பணி தான் செய்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை முறைகேடுகள் தொடர்பாக ஆய்வுகள் நடக்கிறது. நகை, உண்டியல், அன்னதானம் கட்டட கட்டியது போன்றவை குறித்து ஆய்வு நடக்கிறது. தவறுகளை கண்டறிந்து உண்மையில் என்ன நடந்தது பொதுமக்களிடம் வெட்ட வெளிச்சமாக சொல்ல போகிறோம்.
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தரப்படும். குல தெய்வ கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் எடுத்துள்ளதா என புகார் மனு அடிப்படையில் இரு தரப்பினரிடம் விசாரித்து தீர்வு காணப்படும். யானை முகாம் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை தவெகவில் சேர்ப்பதால் தனித்துவம் போய் விடும் நிலை இருக்கிறதே என கேட்ட போது உங்களது கட்சியில் ரசிகர் மன்றத்தில் வந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையே என கேட்ட போது, எங்க கட்சிக்கு வருபவர்கள் எங்களை போல் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும்.
இதை எல்லாம் பார்த்து தான் கட்சிக்கு சேர்கிறோம். தவறு செய்ய எங்கள் கட்சி தலைவர் அனுமதிக்க மாட்டார். தூந்து போன கட்சி என சொல்லி அந்த கட்சியிலிருந்து அதிகமாக சேர்ப்பது க சேர்ப்பது ஏன் என கேட்ட போது, நடக்கிறது உங்களுக்கே தெரியும். நான் சொல்ல வேண்டியதில்லை. கோயில்களில் திடீர் செய்வது தொடரும். தவறு செய்தவர்களை பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுப்பேன் கோயில்கள் திடீர் சோதனை தூய்மையாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
