கோவையில் துணிப்பை மிஷின்கள் மாயம்
கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் தடை செயப்பட்ட பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறையவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் வந்தது. இந்த நிலையில் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தனியார் நிறுவனம் மூலமாக மஞ்சள் பை வழங்கும் மெசின்களை வைத்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள் மார்க்கெட் வணிக வளாக பகுதிகளில் மஞ்சள் பை கிடைக்க செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தடையின்றி பல்வேறு இடங்களில் மஞ்சள் பை கிடைத்தால் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவார்கள் என இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் மெசின்கள் வைக்கப்படவில்லை. சில இடங்களில் குறிப்பாக தாலூகா அலுவலகம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கூட மெசின்கள் வைக்காமல் விட்டு விட்டார்கள்.
இதன் காரணமாக மக்கள் துணிப்பைகள் கிடைக்காமல் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகி விட்டது. துணிப்பை மெசின்கள் வைக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
