Rain fall வானிலை அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்… மழை எப்ப வருமோ…?!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கப் போகிறது என கடந்த இரண்டு வாரங்களாக தமிழக வேளாண் பல்கலைக்கழக வானிலை அறிவிப்பு மற்றும் மத்திய வானிலை துறை அறிவிப்புகள் தொடர்ந்த வந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. ஒரு சில இடங்களில் இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர் என லேசாக கூட இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது . இது மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது .

துல்லியமாக வானிலை துறையினர் கண்டறியாமல் மேம்போக்காக மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் பயிர் சாகுபடி துவக்க திட்டமிருந்த திட்டமிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பருவமழை முன்கூட்டியே துவங்கும் என அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் . ஆனால் மேற்கு மண்டல மாவட்டங்களில் கடும் வெயில் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள திருமூர்த்தி அணை, ஆழியாறு, அப்பர் நீராறு, பிஏபி , சோலை ஆறு , சிறுவாணி அணை, பில்லூர் போன்றவற்றில் வறட்சி நிலைமை நீடிக்கிறது. பவானி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்து காய்ந்த நிலையில் கிடைக்கிறது .

எனவே வானிலை துறை முறையாக மழை குறித்த தகவல்களை சரியாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *