கோவை மாவட்டத்தில் கூடுதலாக 5 revenue village, pirka உருவாக்கம்…
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 3 நகராட்சி, 33 பேரூராட்சிகள் அமைந்துள்ளது.
மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ, மக்கள் தொகை 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள், உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி, கோவை மாவட்டத்தில் 5 வருவாய் குறு வட்டங்கள் (பிர்க்கா) மற்றும் 5 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது.
கோவை வடக்கு வட்டம் கணபதி உள்வட்டத்தினை பிரித்து சங்கனூர் புதிய வருவாய் உள்வட்டம் மற்றும் சங்கனூர் வருவாய் கிராமத்தினை பிரித்து புதிய சங்கனூர் மேற்கு மற்றும் எஞ்சிய சங்கனூர் கிராமத்தினை சங்கனூர் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மதுக்கரை வட்டம் குறிச்சி மற்றும் ஒத்தக்கால் மண்டபம் ஆகிய உள்வட்டத்தை சீரமைத்து புதிதாக வெள்ளலூர் வருவாய் உள்வட்டம், மேட்டுப்பாளையம் உள்வட்டத்தினை பிரித்து சிறுமுகை புதிய வருவாய் உள்வட்டம் மற்றும் சிக்கதாசம்பாளையம் வருவாய் கிராமத்தை சீரமைத்து சிக்கதாசம்பாளையம் டவுன் எனும் புதிய வருவாய் கிராமம் மற்றும் எஞ்சிய
சிக்கதாசம்பாளையம் வருவாய் கிராமத்தினை சிக்கதாசம்பாளையம் ரூரல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சூலூர் உள்வட்டத்தினை பிரித்து இருகூர் புதிய வருவாய் உள்வட்டம், கருமத்தம்பட்டி உள்வட்டத்தினை பிரித்து நீலம்பூர் புதிய வருவாய் உள்வட்டம், கோவை வடக்கில் துடியலூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய
உள்வட்டத்தை சீரமைத்து புதிதாக கவுண்டம்பாளையம் வருவாய் உள்வட்டம், தெற்கு வட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கோவை டவுன் ஆகிய உள் வட்டங்களை சீரமைத்து புதிய ராமநாதபுரம் உள்வட்டம் மற்றும் கோவை டவுன் வருவாய் கிராமத்தை பிரித்து புதிய கோவை டவுன் மேற்கு மற்றும் புதிய கோவை ரூரல் என்ற வருவாய் கிராமங்கள் மற்றும் எஞ்சிய
கோவை டவுன், இனி கோவை டவுன் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய வருவாய் கிராமங்களில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க, பணிகளை விரைவாக்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. பட்டா மாறுதல், நில அளவை பணிகளை வேகமாக்க இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வருவாய்த்துறை உத்தரவு வழங்கியுள்ளது.
