கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே FL2, FL3 பார்கள் அதிகரிப்பு…

கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே கீதா ஹால் ரோட்டில் ஏகப்பட்ட லாட்ஜ், ஹோட்டல்கள் இருக்கிறது.

ஒரே வீதியில் மட்டும் 12 ஹோட்டல்களில் எப்எல் உரிமம் பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என கட்டுப்பாடு விதித்து கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பள்ளி கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு கலங்களில் இருந்து இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் மதுபான கடைகள் இருந்தால் மூட வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவு டாஸ்மாக் மட்டுமே பொருந்தும் கலால் துறைக்கு அதாவது தனியார் பாருக்கு பொருந்தாது என கூறி விட்டார்கள். இந்த விதிமுறையால் பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகேயுள்ள தனியார் பார்கள் மூடப்படவில்லை.

கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே அரசு மருத்துவமனையை ஒட்டி செயல்படும் லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களில் 11 டூ 11 இயங்கும் 12 தனியார் பார்கள் இருக்கிறது. இதில் சில பார்களில் இரவு 11 மணிக்கு பிறகும் மதுபானங்கள் சப்ளை ஆகிறது.

கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வரும் பயணிகள் ஹோட்டல், லாட்ஜ்களில் தங்குவதற்கு பார்களை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அதனை மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது எனக்கூறி கடந்த காலங்களில் மூடிவிட்டார்கள்.

இந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இருந்தது. அதையும் பள்ளி அருகே இருக்கிறது என தற்போது மூடிவிட்டார்கள். ஆனால் பள்ளி, கல்லூரியிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் 12 தனியார் பார்கள் இருந்தும் அதனை மூடாமல் டாஸ்மாக் மற்றும் கலால் துறை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வினோதமாக இருக்கிறது. தமிழக வெற்றி கழக அரசு டாஸ்மாக் மதுபான விவகாரத்தில் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *