கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பெரியார் அறிவுலகம்’ விரைவில் திறப்பு…


கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் அறிவியல் மையம் 2வது தளத்தில் சிறுவர் நூலகம், சுய வாசிப்புப் பிரிவு
மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள்
4வது தளத்தில் தமிழ் புத்தகங்களும் பருவ இதழ்களும் கொண்ட பகுதி
5 மற்றும் 6 வது தளத்தில் ஆங்கில புத்தகப் பிரிவு, புத்தாக்க மையங்களும் தயார் செய்யும் பணி நடக்கிறது.
7வது தளத்தில் அறிவியல் மையம், எண்ணிம நூலகம் மற்றும் AI செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் விண்வெளி தோற்றத்தை கண் முன் நிறுத்தும் வகையில் கோளரங்கம் உருவாக்கும் பணி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் 1.25 லட்சம் புதிய புத்தகங்கள் வாங்கி பயன்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது . இதுவரை சுமார் 25,000 புத்தகங்கள் பெறப்பட்டிருக்கிறது. விரைவில் தேவையான புத்தகங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணி மற்றும் உள் அலங்கார பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இந்த பணிகளை இன்று கோவை பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். வெளி மாநிலத்திலிருந்து இன்டீரியர் டிசைனிங் குழுவினர் வரவழைக்கப்பட்டு
வெளி தோற்ற அலங்கார ஏற்பாடு செய்வதற்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இன்னும் இரண்டு மாதத்தில் மொத்த பணிகளும் முடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டால் தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் நூலகம் மற்றும் கோள அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டு காண வாய்ப்புள்ளது.
