பாட்டிலுக்கு 30 ரூவா extra வசூல்… Covai FL2 பார்களில் ஏக போக மோசடி…!

கோவை மாவட்டத்தில் எப்எல் 2, 3 உரிமம் பெற்ற தனியார் பார்கள் அதிகமாகியிருச்சு.
கடந்த 3 வருஷத்தில் 80க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் கோவை மாவட்ட கலால் துறை லைசென்ஸ் வாரி வழங்கியிருக்குதாம். இதற்கு செந்தில் பாலாஜி குரூப் முக்கிய காரணமாக இருந்ததா கலால் துறை வட்டாரத்தில் பரவலாக பேச்சு இருக்குது. ஒவ்வொரு தனியார் பாரும் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்காங்க.
இந்த பார்களுக்கு அனுமதி வாங்குவதிலும் பல கோடி ரூபாய் கை மாறி இருக்குதாம். தனியார் பார்களில் மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ஆனால் ரூல்ஸ் படி மதுபாட்டில்களை வெளியே விற்பனை செய்ய கூடாதாம்.
குவார்ட்டருக்கு 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்றாங்களாம். இப்ப டாஸ்மாக் பாட்டில், ஸ்டிக்கர் விவகாரம் வந்த பின்னாடி 40 ரூவா வரைக்கு கூடுதல் வசூல் போய்ட்ருக்காம்.
சில்லி சிக்கன், ஆம்லெட், ஆப்பாயில், சிக்கன் கிரேவி, பிஷ் பிரை என சைட் டிஷ் அயிட்டங்களின் விலையும் ஏறி போச்சு.
இதையெல்லாம் கலால் துறை கண்டுக்கலையாம். சோசியல் மீடியாவில் கழுவி ஊத்தி கலாய்ச்சும் கம்முனு இருக்காங்க. பேருக்காவது நடவடிக்கை எடுங்கன்னு பேசிக்கிறாங்க. மனமகிழ் மன்ற உறுப்பினர்கள். லாட்ஜ், ஹோட்டல்களில் தங்கினால் பார் பயன்படுத்தலாம் என விதிமுறை இருக்கிறது.
மனமகிழ் மன்ற உறுப்பினரா இல்லாதவங்களும் எப்எல்3, எப்எல்3 பார்களில் சரக்கு வாங்கறாங்க, குடிக்கிறாங்க. இதை கண்டுக்காம இருக்க கலால் துறை தனியாக மாச மாசம் மாமுல் வாங்குதாம். இப்போ மக்களை ஏமாற்றும் வகையில் ஆதார் கார்டு நகல் கட்டாயம் என கேட்டு வாங்கி குடி பிரியர்களுக்கு தெரியாமல் அவர்களை மனமகிழ் மன்ற உறுப்பினராக சேர்க்கும் பணிகள் நடக்கிறதாம்.
மனமகிழ் மன்ற பார்கள் மதுபானங்கள் விற்பனையில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்து வர்றாங்க. டாஸ்மாக் மதுபான கடைகளில் கிடைக்காத ஏராளமான மது வகைகள் குறிப்பாக நடுத்தர, உயர் ரக மதுபானங்கள் எப்எல் உரிமம் பெற்ற பார்களில் குவிந்து கிடக்கிறது. இது டாஸ்மாக் கடைக்கு வராம எப்படி போவுது என தமிழக வெற்றி கழக அரசுக்கு மட்டுமே தெரியும் சிதம்பர ரகசியமாக இருக்கிறது.
புதிதாக பொறுப்பேற்ற அரசு டாஸ்மாக் கலால் துறை முறைகேடுகளை தடுக்கணும். கொள்கை திட்டம் உருவாக்க சில நாட்கள் தேவைப்படாமல் குடிமகன்களிடம் கொள்ளையடிக்கும் காசை தடுக்க ஏன் தயங்க வேண்டும்.
கூடுதல் காசு யார் யாருக்கு பங்கு போகுது என மகா ஜனங்கள் கேள்வி கேட்கிறாங்க. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை போல் தரமான மதுபானங்களை வழங்கவும் வெற்றி கழக அரசு முன் வரவில்லை. முறைகேடுகளை தடுத்து நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
