கோவை டாஸ்மாக் கடைகள் மூடல்: எப் எல் 2 பார்களில் குடிபிரியர்கள் கூட்டம்…!

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது.

இதில் சமீபத்தில் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது . பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள உள்ள இந்த கடைகள் மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது . இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.

அரசு கூடுதலாக பத்து ரூபாய் வாங்க கூடாது என தெரிவித்துள்ளது . ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். பாட்டிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் தொடர்பாக பத்து ரூபாய் வாங்குவது தொடர்பாக சரியான அரசு உத்தரவு வழங்க வேண்டும். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு பணி ஒதுக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் முறையாக செயல்பட தேவையான கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட அளவில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்காமல் போராட்டம் செய்தனர்.

மேலும் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட அளவில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாமல் மூடி கிடந்தது. மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க முடியாமல் தவிப்படைந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் எப்எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார்களில் மதுபானங்கள் வாங்குவதற்கு குடி பிரியர்கள் குவிந்தனர்.

குறிப்பாக கோவை ரயில் நிலையம் காந்திபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த தனியார் மது பார்களில் குடி பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது . இதைத் தொடர்ந்து அங்கே மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது . பல இடங்களில் மதுபான பாட்டில்கள் கிடைக்காமல் பலர் தவிப்படைந்தனர்.

பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நாளை மதுபான கடைகள் திறக்கப்படுமா என தெரியாத நிலைமை இருக்கிறது. இதனால் மாவட்ட அளவில் பிளாக் சேல் மற்றும் தனியார் பார் விற்பனை உச்சகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *