கோவை ரேஷன் கடையில் தரமற்ற பற்றாக்குறை வெங்காயம் விற்பனையா..!?

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் வழங்கும் நோக்கத்தில் நாசிக் நகரில் இருந்து லாரிகளில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்து வழங்கும் பணியை கூட்டுறவு துறையினர் மேற்கொண்டனர். கோவையில் முதற்கட்டமாக 650 ரேஷன் கடைகளுக்கு இன்று பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை 2 செய்யப்பட்டது. இந்த…

Read More

கோவையில் கட்டிட மேஸ்திரி கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

கோவை அரசூர் ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நாட்டுதுரை (50), கட்டட மேஸ்திரி. இவரின் மைத்துனர் பாண்டியன் (40), கட்டட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை மது வாங்க அதிகமாக செலவழித்து வந்தார். நாட்டு துரையிடம் பாண்டியன் வேலை செய்து வந்தார். பணத்தை அதிகம் செலவழித்ததால் பாண்டியனுக்கு தேவைக்கு மட்டும் அவர் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கட்டட பணி நடைபெறும் இடத்துக்கு நாட்டுதுரை…

Read More

மதுக்கரையில் மலேசியா காரர்களை துப்பாக்கியால் சுட முயன்ற மர்ம நபர்கள்…!

மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இன்று இரவு அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் மதுக்கரை…

Read More

உக்கடம் பஸ் ஸ்டாண்ட் 2 பணிகள் தீவிரம்

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் இரண்டாக பிரித்து டெர்மினல் 1, 2 என அமைக்கப்படுகிறது. டெர்மினல் 1 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது டெர்மினல் 2 பணிகள் ரூ.21.55 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் தெற்கு நோக்கி செல்லும் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 ஏக்கரில் மேற்கூரை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. உணவுக் கூடம், கழிவறைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை போன்ற பிற வசதிகள் தொடர்பான பணிகள்…

Read More

டாஸ்மாக் பாட்டில்களில் மோசடி…

கோவை கலால் மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 915 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் கட்டுப்பாடின்றி அதிகமாகி விட்டது. மதுபான பாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து டாஸ்மாக் குடோன்களுக்கும், |குடோன்களிலிருந்து விற்பனை கடைகளுக்கும் கொண்டு செல்லும் சில பாட்டில்கள் உடைந்து விடுகிறது. சில மதுபான கடைகளில், ஹாலோ கிராம் சீல், பாட்டில் திரும்ப பெறும் ஸ்டிக்கர் இருப்பதில்லை. இந்த முத்திரை இல்லாத பாட்டில்கள் போலியாக இருக்கும் சந்தேகம் இருக்கிறது….

Read More

கோவை போலீஸ் மியூசியத்தில் வீரப்பன், மம்பட்டியான் துப்பாக்கி…!

காவலர் தினம் வருகின்ற 6-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், காவல்துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், உள்கட்டமைப்பு, அமைப்பு மற்றும் புலனாய்வு முன்றுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறையினர்…

Read More

கோவையில் போக்குவரத்து விதி மீறல்: 25 கோடி ரூபாய் அபராதம் நிலுவை…!

கோவை மாநகர போலீசார், மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்துச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் மேலும், வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் எளிதாகவும். காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல…

Read More

நீரின்றி காய்ந்து கிடக்கும் கோவை குளங்கள்…

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை சராசரியை விட குறைவாக பெய்தது. கோடை மழையின் சராசரி அளவு 152மி.மீ என்ற நிலையில், நடப்பாண்டில் கோடை மழை 132 மி.மீ பதிவானது. இது கடந்த ஆண்டுகளில் பதிவான கோடை மழையை விட மிக குறைவாகும். மேலும், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையான 210மி.மீ மழையில் 178 மி.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

Read More

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் போராட்டம்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளும், சந்தையில் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக வியாபாரிகளும் கூறி தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை திருச்சி சாலை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோவையின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தை…

Read More

நடுரோட்டில் ஆபத்தான மின்கம்பங்கள்

கோவை சுங்கம் பெரியார் நகர் பகுதியில் நடுரோட்டில் மின் துன்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சில மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழும் நிலைமையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் அங்கே மின் கம்பங்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தனர். ஆனால் இந்த பணியை அவர்கள் நிறைவாக செய்யாமல் அறைகுறையாக பெயரளவுக்கு செய்துள்ளனர். மின்கம்பங்களை மிகவும் உறுதியாக செய்யாமல் தரைதளத்தில் மேலோட்டமாக கான்கிரீட் தளம்…

Read More