கோவையில் 20265 வாக்காளர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது, இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் போக்குவரத்து கழக ஊழியர்களும் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 28 பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தபால் ஓட்டுகள் போடப்பட்டன.

மேலும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி சென்று அதிகாரிகள் தபால் ஓட்டு பெற்றனர். இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 765 பேர் தபால் ஓட்டு செலுத்தினர் இந்த தேர்தலில் பணிபுரியும் தேர்தல் ஊழியர்கள் அவர்களுக்குட்பட்ட தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணிபுரிந்தால் அந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தபால் ஓட்டுக்கு தகுதி பெற்ற / 241 பேர் அவர்கள் பணிபுரிந்த வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர். 20 ஆயிரத்து 265 பேர் மட்டுமே தபால் ஓட்டு போட்டனர். இந்த தபால் ஒட்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் எண்ணப்படும். ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்த வரும் 3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 185 மத்திய படை வீரர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *