சிறுவாணி அணையில் 20 மி.மீ., மழை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 49.53 அடி இதில் நேற்று 19.71 அடியாக நீர் மட்டம் இருந்தது. நீர் மட்டம் 60 சதவீதத்திற்கு கீழ் குறைந்து விட்டது. 10.1 கோடி லிட்டர் வரை தினமும் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் அணையில் இருந்து நேற்று 5.1 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்பட்டது.

நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது, இன்னும் சில நாட்களால் அணை வறண்டு விடும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக 50 சதவீத அளவிற்கு மட்டுமே குடிநீர் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது சற்று நிலைமை மாறி இருக்கிறது. கடந்த 3 நாட்களாக அணையின் நீர் தேக்க பகுதியில் லேசான, மிதமான மழை பெய்து வருகிறது. இன்று அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 20 மி.மீ மழை பெய்தது. இதனால் நீர் மட்டம் உயரவில்லை. ஓரிரு நாட்கள் மழை நீடித்தால் அணையின் நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *