பணத்திற்கு ஆதாரம்: தேர்தல் பிரிவினரால் வியாபாரிகள் தவிப்பு…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் பரிசு என கருதி தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரிவினர் தொழில் வர்த்தகம் தொடர்பான பணம், பொருட்கள் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை காட்டிலும் எங்கே எப்போது பணம் பெறப்பட்டு, எப்போது பொருள் வாங்கப்பட்டது. என கேட்டு பறிமுதல் செய்து வருகின்றனர் இதனால் குழப்பமான நிலையை இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாளில், 30 லட்ச ரூபாய்க்கு அதிகமான தொகை குண்டா, பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லெட் வியாபாரியிடம் 6.50 லட்ச ரூபாய், பிஸ்கட் வியாபாரியிடம் 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் பறிமுதல் செய்த அலுவலர்களிடம் தொகைக்கான ஆதாரங்களை காட்டி அதை திரும்ப பெற இன்று சிலர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கணக்கு பிரிவில் குவிந்தனர்.

இது தொடர்பாக புகார்தாரர்கள் கூறுகையில், “பொருட்களை கொடுத்து பணம் வாங்கி வருகிறோம். பொருட்கள் விற்பனைக்கு ஜிஎஸ்டி இருக்கிறது. அதை காட்டுகிறோம் வணிக வர்த்தக விவரங்களை காட்டுகிறோம். ஒரு இடத்திற்கு கலெக்க்ஷன் பணிக்கு போய் தொகை வாங்கி வருகிறோம்.

அந்த பணத்தை பறிமுதல் செய்து விடுகிறார்கள். நாங்கள் விற்ற பொருட்கள், அதற்கு வாங்கிய தொகை என ஆதாரம் காட்டினாலும் இது அந்த தொகை தானா என தேர்தல் பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். மேலும் பணத்தை பறிமுதல் செய்தால் தேர்தல் பிரிவில் பாராட்டு கிடைக்கும் என்பது போல் கருதி பணி செய்கிறார்கள்

இதனால் எங்களுக்கு தான் அலைச்சல் நாங்கள் பணத்திற்கான ஆதாரங்களை கணக்கு பிரிவில் காட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு சென்று அங்கே விண்ணப்பித்து ஆதாரங்களை காட்டி, கடைசியாக கருவூலம் சென்று அங்கே ஆதாரம் காட்டி பெற வேண்டியிருக்கிறது.

பல நாட்கள் நடையாய் நடந்தால் தான் தொகையை மீட்க முடியும். இல்லாவிட்டால் அரசு கணக்கில் சேர்த்து விடுவோம் என்கிறார்கள். ஆதாரங்களை அலுவலர்கள் சிலர் முறையாக ஏற்பதில்லை. ஆதாரம் இருந்தாலும் சந்தேகம் என பறிமுதல் செய்கிறார்கள். “என்றனர்

தேர்தல் பிரிவினர் கூறுகையில், “ஆதாரங்களை சரியாக காட்ட வேண்டும். எவ்வளவு பணம் யாரிடம் வாங்கப்பட்டது என ரசீது தேவை அது இல்லாமல் பணத்தை வெளியே எடுத்து செல்ல கூடாது

உரிய ஆதாரம் காட்டினால் பணத்தை முறையாக பெற முடியும். இதுவரை பரிசு பொருட்கள் என்ற சந்தேகத்தில் பறிமுதல் செய்த பொருட்களை மீட்க யாரும் வரவில்லை. விசாரணைக்கு வரவழைத்து பொருட்கள் தொடர்பாக கேட்க இருக்கிறோம். பரிசு பொருட்கள் தொடர்பாக தான் அதிக புகார்கள் வருகிறது.

ஆனால் பொருட்கள் வீடு வீடாக கொடுத்து முடித்து விட்டார்கள் என்கிறார்கள் வீட்டில் கொடுத்த பொருட்களை கட்சிக்காரர்கள் படம் இருக்கிறது, பாத்திரத்தில் பெயர் எழுதி இருக்கிறது என்பதற்காக பறிமுதல் செய்ய முடியாது, பொதுமக்கள் தேர்தல் பிரிவினருக்கு சி விஜில் செயலி மூலமாக ஆதாரத்துடன் புகார் தந்தால் வழக்கு போட ஏதுவாக இருக்கும், என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *