கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி…

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (40), ஆட்டோ ஓட்டுநர். இவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு இன்று காலை வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து எடுத்து வந்து இருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பெரியசாமி, தன்னை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட சிலர்…

Read More

கோவை போலீசார் நைட் ரவுண்ட்ஸ், புட் பேட்ரோல் தீவிரம்…!

கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக, போதை பொருட்கள் கடத்தல், குற்ற செயல்கள் அதிகமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் இரவு காவல் பணியில் அலட்சியமாக இருப்பதால் அசம்பாவிதம், மோதல் தடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து மாநகரில் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஜி.எச். பிரதான ரோடு குறிப்பாக அவினாசி ரோடு பகுதிகளில் போலீசார் இரவில் அடிக்கடி சோதனை செய்கின்றனர். சந்தேக நபர்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறார்கள்….

Read More

சிறுவாணியில் வறட்சி: 50 சதவீதம் குடிநீர் மட்டுமே சப்ளை…

சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 29 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணையின் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக நீர் எடுப்பு 50 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டது. குடி நீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி இருக்கிறது. வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறைவாக…

Read More

டாஸ்மாக் விற்பனையாளர்கள் 60 பேர் சஸ்பெண்ட்…!

கோவை கலால் மாவட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டங்கள். அடங்கியிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சுமார் 1100 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் குறைந்த பட்ச விற்பனை விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் கூடுதலாக 10 ரூபாய், 20 ரூபாய் வாங்க கூடாது. பீர் பாட்டில்களுக்கு கூலிங் சார்ஜ் என அதிக கட்டணம் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி மதுபானங்களுக்கு…

Read More

கோவை நாகர்கோவில் ரயில் வழித்தடம் மாற்றம்…

கோவை நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் டிராக் பராமரிப்பு காரணமாக நாளை வரும் 8 10, 12ம் தேதிகளில் மாற்று பாதையில் இயக்கப்படும். காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவை திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி, பழனி மார்க்கமாக இயக்கப்படும். கோவை வடக்கு. பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர். கொடுமுடி புகலூர் கரூர் பாளையம் மற்றும் எரியோடு ஸ்டேஷன் வழியாக இந்த ரயில் இயங்காது. மாற்று…

Read More

கோவையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காம வெறியனை கடித்து விரட்டிய நாய்… !

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள Nggo காலனி அருகே உள்ள அசோகபுரம் மேம்பாலம் பகுதியில் மனநிலை பாதித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனிமையில் வசித்து வருகிறார். இந்த ஆதரவும் இல்லாத இவர் பிளாட்பாரத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு இரண்டு மணி அளவில் அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க போதையில் இருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். கையில கல் எடுத்து அங்கே இருந்த நாய்களை விரட்ட முயன்றார். மேலும்…

Read More

காவலன் செயலி 45091 பேர் பதிவிறக்கம்…

மாநகரில் தனியாக வசிக்கும் முதியோர் பாதுகாப்பை உறுதிசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், 45,091 பேரை, எஸ்ஓஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். கோவை மாநகரில் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மாநகர போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநகரில் தனிமையில் வசிக்கும் 990 முதியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது முழுமையான விவரங்களை சேகரித்துள்ளனர். காவல்நிலையம் வாரியாக இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முதியோர் பாதுகாப்பு நடவடிக்கையை…

Read More

கோவையில் நடுரோட்டில் நிறுத்தி பெண்களை இறக்கி விடும் டவுன் பஸ்கள்…

கோவை நகரில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாகி விட்டது. மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்றாலும் பஸ்கள் குறைவாக இயக்குவதாலும் குறிப்பிட்ட பல ரூட்களில் பஸ் இல்லாத நிலையில் தனியார் பஸ்களை நம்பி மகளிர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக பிக் ஹவர் எனப்படும் அலுவலக வேலை நேரம் முடிந்து போக்குவரத்து அதிகமாக காணப்படும் சமயங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நேரங்களில் பஸ் ஸ்டாப்புகளில் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. குறிப்பாக…

Read More

கோவையில் கட்டட வரைவு அனுமதி தாமதம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் கட்டட வரைவு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டிட வரைவு அனுமதி விண்ணப்பங்கள் அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆன்லைனில் கட்டட வரைவு விண்ணப்பங்களின் நிலைமை தொடர்பாக முறையாக தெரிவதில்லை என கட்டிட வரைவாளர்கள் புகார் கூறியுள்ளனர். மாநகராட்சி அனுமதி காலதாமதம் செய்து வருவதால் சிலர் அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டி வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக…

Read More

கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு…

கோவை மாவட்டத்தி்ல் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் ழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும்,…

Read More