கோவையில் வியாபாரி மாணவரிடம் 49 லட்ச ரூபாய் மோசடி…!
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகர் முதலாவது தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் ( 53). இவரது மகன் மித்தேஸ்வரன்.
இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு செட்டிபாளையம் மெயின் ரோடு கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ( 33) என்பவர் அறிமுகம் ஏற்பட்டது நன்றக பழகி உள்ளனர்ப.
அப்போது செல்வகுமார் சீனிவாசனிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் எனக்கு பழக்கம். நான் அவர்களிடம் பேசி கல்வி கட்டணத்தை குறைத்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.இதை நம்பிய ஸ்ரீனிவாசன் அவரது வங்கி கணக்கிற்கு 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு செல்வகுமார் அந்த பணத்தை கல்லூரியில் கட்டிவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் தேர்வு வந்தது. அப்போது மித்தேஸ்வரனிடம் கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஹால் டிக்கெட் தர மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தந்தை ஸ்ரீனிவாசனிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் செல்வகுமார் கல்லூரியில் சீனிவாசன் கொடுத்த பணத்தை செலுத்தவில்லை என தெரிய வந்தது. இதுகுறித்து செல்வகுமாரிடம் ஸ்ரீனிவாசன் கேட்டுள்ளார். மேலும் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு உள்ளார். ஆனால் பல மாதம் ஆகியும் செல்வகுமார் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சீனிவாசன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செல்வகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர் எஸ் புரம் அருகே உள்ள டிவி சாமி ரோடு இரும்பு கம்பி விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் பொது மேலாளராக சரவணன் ( 47 ) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சரவணன் ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சத்தீஸ்கரில் இருந்து 74 டன் இரும்பு கம்பி கொண்டு வருவதற்காக 40 லட்சம் ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி 2 லாரிகளில் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு அந்த நிறுவனம் கோவை வந்துள்ளது. ஆனால் சரவணன் பணியாற்றும் நிறுவனத்திற்கு அந்த 2 லாரி லோடு இரும்பு கம்பிகளையும் கொண்டு வந்து இறக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சரவணன், பணத்தை வாங்கி இருந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த ராகேஷ் சவுத்ரி என்பவர் மீது ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
