டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு: செந்தில் பாலாஜி பேட்டி…!

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது :

கடந்த 2021 ம் ஆண்டு முதல் தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மின்மாற்றி கொள்முதன் செய்யப்பட்டத்தில், தவறுகள் நடந்திருக்கின்றன என ஒரு அமைப்பு புகார் தெரிவித்து.

மின்சார வாரியத்தைப் பொருத்தவரைக்கும், மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987 ம் ஆண்டு தொடங்கி அன்றைய நடைமுறைகள் என்ன பின்பற்றப்பட்டதோ. அதே நடைமுன்றதான் இன்று வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒரு டெண்டர் அறிவிக்கும்போது 20 பேர், அந்த டெண்டர் கலந்துக்குவாங்க. சிலர் டெண்டர் L1 தொகை மேட்ச் ஆகுற மாதிரி இருக்கும் சில பேர் வந்து எல் டூ பிரைஸ் கோட் பண்ணிருப்பாங்க.

பொதுவா டான்ஜெட்கோ பொருத்தவரைக்கும் எல்.ஒன் பிரைஸ் யாரு மேட்ச் பண்ணி கொடுக்குறாங்களோ அவங்களுக்கு அந்த டெண்டர் பிரிச்சு கொடுப்பாங்க. ஒருத்தரே டிரான்ஸ்பார்மர் சப்ளை பண்ண முடியாது அப்படிங்கறதுனால இந்த நடைமுறை

இது 1987-ல் இருந்து இருக்கக்கூடிய நடைமுறை. இந்த டெண்டரை பைனல் பண்ணி இந்த ஆர்டர் கொடுக்கலாமா வேண்டாமான்னு முடிவு எடுக்கிறது அதிகாரிகள் சார்ந்த குழு.

ஒவ்வொன்னா பைனல் பண்ணி இதுக்கான உத்தரவுகளை பிறப்பிக்கிறாங்க . அவர்களுக்கான ஆர்டர் கொடுக்குறாங்க. அதனால் இந்த டெண்டரை பொறுத்தவரைக்கும் டான்ஜெட்கோனுடைய மின்மாற்றி கொள்முதலைப் பொறுத்தவரைக்கும் கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள்தான் இப்பொழுதும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.

இடையில் வந்து சில நேரங்கள் ஆட்சி மாறியிருக்கலாம், ஆட்சி மாறி இருந்தாலும் கூட அப்பொழுதும் அதே காலத்தில் இந்த நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பா அந்த ஒரு அமைப்பு வந்து தாக்கல் செய்த வழக்குல ஏதோ இப்பொழுது இந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்குள்ள டான்ஜெட்கோல தவறு நடந்தது போல தனியாக அதை பிரித்து எடுத்து நீதிமன்றத்திலே வழக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

அது குறித்து புகாரையும் கொடுத்திருக்கின்றார்கள். எந்த இடங்களிலும் டான்ஜெட்கோ அல்லது அரசு நிர்வாகம் இதுல வந்தவித தவறுகளுக்கும் இடமில்லை முறையாக மூன்று குழுக்கள் அதை பரிசீலித்து ஒவ்வொரு டெண்டரும் இறுதி முடிவெடுத்துதான் அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன எந்த இடங்களிலும் அரசுக்கு, டான்ஜெட்கோவுக்கோ ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்பதை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்

பிஜேபி ஆட்சியில் இருக்கும்போது விசாரணை நியாயமாக நடக்குமா? சிபிஐ விசாரணை நியாயமா நடக்குமா? நடக்கலையான்னு விசாரணை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எப்படி போகுது. என்னங்கிறதை பொறுத்திருந்து பார்ப்போம். சில நேரங்களில் இதுல கூட , சில அதிமுகவுடைய வழக்கறிஞர்கள் உள்ள கொண்டு வந்து போட்டாங்க.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *