தவறி விழுந்த மூச்சு திணறிய இரு குழந்தைகள் சாவு
கோவை சவுரிபாளையம் அருகே உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஓம்பிரசாத் மற்றும் விருத்திகா (23) தம்பதியினருக்கு 52 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரியா ஸ்ரீ என பெயர் வைத்தனர்.
குழந்தைக்கு சற்று மூச்சு திணறல் இருந்ததாக தெரிகிறது. நேற்று விருத்திகா குழந்தைக்கு பால் கொடுத்தார் . சிறிது நேரத்தில் குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது. பதறிப் போன அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது வழியில் பரிதாபமாக குழந்தை இறந்துவிட்டது. பால் குடித்த போது மூச்சு விட முடியாமல் குழந்தை இறந்திருக்கலாம் என தெரிகிறது. இறப்புக்கான காரணம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜகரங்கா (28). இவர் மனைவி சாந்தி மம்பலகா (22). இவர்கள் கோவை இருகூர் குரும்பபாளையம் ரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று சாந்திமம்பலகா தனது ஒன்றரை வயது மகள் அனிஷாவை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டது. பேச்சு மூச்சின்றி கிடப்பதாக தெரிவித்தனர்.
குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
