உணவு நிறுவனங்களின் தரம் தொடர்பாக ஆய்வு

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை 3 மாதங்களுக்கு உணவகங்கள் மற்றும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்களிலும் சிறப்பு ஆய்வு நடத்த மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் உணவு சேவை நிறுவனங்களில் இன்று முதல் தங்களின் ஆய்வு பணியை துவங்கினர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள்….

Read More

கோவையில் 5 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் உள்ள 52 கோயில்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பேரூர் பட்டீசுவரர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நுழைவு வாயில் பகுதியில் வைக்கும் வகையில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதியுடன்கூடிய அறை ஏற்படுத்தப்பட்டு…

Read More

டெங்கு கொசுக்களை அழிக்க 10 ஆயிரம் கம்பூசியா மீன்கள்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளை கண்டறிந்து இன்று ஒரே நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணிகளை செய்தனர். ஒவ்வொரு நாளும்…

Read More

கோவையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு…!

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழில் பூங்கா வளாகம் உள்ளது. அங்கு ஐ.டி., சாப்ட்வேர் என 6 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மும்பையை தலைமையிடமாக கொண்ட சாப்ட்வேர் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில், இன்று காலை 9…

Read More

கோவையில் முகமூடி அணிந்து நகை பறித்த மாணவன் மாணவி கைது…!

கோவை போத்தனூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அங்குள்ள பல் சிகிச்சை கிளினிக் எப்போது திறப்பார்கள் என கேட்டு பேச்சுக் கொடுத்துள்ளார். மருத்துவரின் வீடு எங்குள்ளது என்றும் கேட்டுள்ளார். சரஸ்வதி, மருத்துவரின் வீடு உள்ள வழியை காட்டிய போது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்…

Read More

தவெக ஆட்சி 5 ஆண்டு நடக்காது… எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது தமிழக முதல்வர் விஜய், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதற்காக மேட்டூர் வந்திருக்கிறார்.. அதை செய்திருக்கிறார். இதை செய்திருக்கிறார்… என்கிறார்கள் ஆனால், எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் தமிழக சட்டமன்றம் தற்போது நடக்கிறது. சட்டமன்றம் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்தாலே இது தெரிந்துவிடும். உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த இலாகா அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும் ஆனால், ஒருசில…

Read More

எஸ்எஸ் குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்:7 பேர் மீது வழக்கு

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடமும், வில்லங்க சான்று பெற வருபவர்களிடமும் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 82,500 ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அடுத்தக்கட்ட…

Read More

ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை..

கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் 2.5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த பகுதி, கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. 5 மீட்டர் அகலத்தில் வாக்கிங் பகுதி உருவாக்கப்பட்டு ஸ்டைலான கிரானைட் கோட்டிங் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை வாக்கிங் சென்று வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை மேலும் இரு மடங்கு அதிகமாகியுள்ளது. கூட்டம் அதிகரிப்பினால் வாக்கிங்…

Read More

கோவையில் வீட்டு மனை பட்டா கேட்டு மடிபிச்சை எடுத்து போராட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், செம்மாண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய்கள் பறித்து விற்பனை செய்ய ஏலம் விடப்படுவது வழக்கம். இதன்மூலம், கோயிலுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. தற்போது ரூ. 19 லட்சத்திற்கு மட்டுமே…

Read More

நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம், போத்தனூர்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு RG ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06078) செப்டம்பர் 4 ம் தேதி முதல் 27-ம்- வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்….

Read More