கோவை மாவட்டத்தில் கிராமங்களில் தேர்தல் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி…
கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
போஸ்டர் பேனர், கொடி மற்றும் கட் அவுட் வைப்பது தொடர்பாகவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சி வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் தொண்டர்கள் சொந்த செலவில் சொந்த சொத்துகளின் மீது எந்த நபருக்கும் இடையூறு இல்லாத வகையில் பேனர்கள், கொடிகள், கட் அவுட்டுகள் வைக்கலாம்.
ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் இதுபோன்று விளம்பரம் செய்திட அனுமதி கிடையாது கிராம பகுதி, ஊராட்சிகளில் இந்த விளம்பரம் செய்யலாம். சுவரில் எழுதினால் அந்த வீட்டின் உரிமையாளரின் அனுமதி கட்டாயம் அவசியம். தனியார் வாகனங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி கொடி, பேனர் தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.
இப்படி பேனர், கொடி கட்டி விளம்பரம் செய்வதன் மூலம் தனிப்பட்ட வாக்காளரை கவரும் நிலை ஏற்பட்டால் அது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 176 படி நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற தவறு செய்ய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
