கோவை மாவட்டத்தில் தேர்தல் ஊர்வலம் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு…
கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுபாடுகள், விதிமுறைகள் வழங்கி தேர்தல் பிரிவினர் உத்தரவு வழங்கியுள்ளனர்
இதில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்கள் கூட்டுறவுத்துறை இடங்கள் போன்றவற்றில் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக்கூடாது. கல்வித்துறை அலுவலகங்கள், மைதானங்கள், நிறுவனங்கள் எதிலும் அரசியல் நடவடிக்கை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது.
உள்ளூர் சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் வேட்பாளர்களும் செய்யக்கூடாது. அப்படி அவர்கள் விளம்பரம் செய்திருந்தால் அவற்றை அகற்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலமாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு எந்த பதிலும் தராமல் இருந்தால் மாவட்ட நிர்வாகம் அந்த விளம்பர சாதனங்களை அகற்றிவிட்டு அதற்காக செய்யப்பட்ட செலவின தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கும் மேற்கண்ட தொகையை வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டு பின் உரிய சட்டங்களின் கீழ் குற்றம் செய்தவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் .
அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள் ஊர்வலத்தின் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது ஊர்வலத்தில் வாகனங்கள் கட்டாயம் இடைவெளி விட்டு செல்ல வேண்டும். முன்னரே அனுமதி பெற்று ஊர்வலம் நடத்த வேண்டும் முக்கிய அலுவலக நேரம் தவிர பிற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மட்டுமே ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
துப்பாக்கி, பட்டாசு போன்ற பல்வேறு வெடிப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பிரச்சாரத்தில் விலங்குகளை பயன்படுத்தக் கூடாது.
அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நட்சத்திர பேச்சாளர்களுக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பெற்று இருக்க வேண்டும். அவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பெறப்பட்ட அனுமதி ஆணை அசலை வாகனத்தின் முன்பு கட்டாயம் ஒட்டி இருக்க வேண்டும் நகள் எடுத்து பயன்படுத்தக் கூடாது அனுமதி பெறாத வாகனங்களை பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது நான்கு சக்கர வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்துக் கொள்ள அனுமதி கிடையாது.
அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் டிரைவர் உள்பட ஐந்து பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு, அதற்கு மேல் பயணம் செய்யக்கூடாது. மாற்று கட்சியினர் தொடர்பான கருத்துக்களை உரிய ஆதாரம் இன்றி வெளியிட கூடாது,
மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான நோட்டீஸ் போஸ்டர் ஓட்டக்கூடாது. மாற்றுக் கட்சியினர் ஊர்வலம் கூட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது அங்கு சென்று ஊர்வலம் கூட்டம் நடத்த முயற்சி செய்யக் கூடாது.
ஊர்வலங்களில் கலவரங்களில் ஏற்படுத்தும் வகையில் செயல்பட கூடாது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சின்னங்கள் கொடி போன்றவற்றை வரைவது கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை
முன் அனுமதி பெற்று நகரும் வாகனங்களில் மற்ற வகை ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம். அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பின் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
