கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள்…!

கோவை மாவட்டத்தில் 27.33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,32,220 ஆண் வாக்காளர்கள், 1,47,924 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தினர் என 2,82,179 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,868 ஆண் வாக்காளர்கள், 1,59,647 பெண் வாக்காளர்கள், 101 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,07,616 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2,05,189 ஆண் வாக்காளர்கள், 2,16,834 பெண் வாக்காளர்கள், 115 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 4,22,138 வாக்காளர்கள் இடம் பெற்றனர்.

கோவை வடக்கில் 1,45,849 ஆண் வாக்காளர்கள், 1,51,061 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தினர் என 2,96,939 வாக்காளர்களும், தொண்டாமுத்தூரில் 1,41,641 ஆண் வாக்காளர்கள், 1,51,577 பெண் வாக்காளர்கள், 106 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2,93,324 வாக்காளர்களும்,

கோவை தெற்கில் 91,301 ஆண் வாக்காளர்கள், 97,545 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 1,88,878 வாக்காளர்களும் இறுதி பட்டியலில் இடம் பெற்றனர்.

சிங்காநல்லூரில் 1,30529 ஆண் வாக்காளர்கள், 1,39,388 பெண் வாக்காளர்கள், 24 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2,69,941 வாக்காளர்களும், கிணத்துக்கடவில் 1,47,068 ஆண் வாக்காளர்களும், 1,58,774 பெண் வாக்காளர்களும், 36 மூன்றாம் பாலினத்தினர் என 3,05,878 வாக்காளர்களும்,

பொள்ளாச்சியில் 96,994 ஆண் வாக்காளர்களும், 1,06,942 பெண் வாக்காளர்களும், 35 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2,03,971 வாக்காளர்களும், வால்பாறையில் 82,100 ஆண் வாக்காளர்கள், 91,487 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 1,73,608 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் 13,22,759 ஆண் வாக்காளர்களும், 14,21,179 பெண் வாக்காளர்களும், 534 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம் பெற்றனர். மொத்தமாக 27,44,472 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இந்த தேர்தலில் ஒட்டு போட உரிமை உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போட்டோவுடன் கூடிய வங்கி புத்தகம் போன்ற 12 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டு போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *