கோவை சுந்தராபுரம் எப்எல்2 பாரில் ‘குடி பிரியர்களுக்கு’ கும்மாங்குத்து…!
சுந்தராபுரம் பார் பைல் படம்…
கோவை மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் எப்எல்2 உரிமம் பெற்ற 11 டூ11 செயல்படும் மனமகிழ்மன்ற மதுபான கடை உள்ளது.
இன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு இந்த கடையில் குடிபிரியர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பார் ஊழியர்களிடம் மதுபானம் சரியில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர்.
பாரில் உணவு பொருட்கள் அதிக விலை விற்பனை செய்கிறார்கள். குவாட்டர், பீர் பாட்டிலுக்கு 30 ரூபாய் கேட்கிறார்கள் என குடிபிரியர்கள் கேள்வி கேட்டனர். அப்போது ஊழியர்கள், நாங்க எப்எல்2 கடை, அப்படித்தான் இருக்கும். இங்க எதுக்கு வர்றீங்க என கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் செய்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் அந்த வாலிபர் மயக்கமடைந்து விட்டார், வாலிபர் அபாய கட்டத்தில் உயிருக்கு போராடுவதாக சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபருக்கு அவசர சிகிச்சை தரப்பட்டது.
அவர் மயங்கிய நிலையில் இருந்து மீண்ட நிலையில் அவரை போலீசார் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதல் விவகாரம் காரணமாக பாரை போலீசார் அதிரடியாக மூட வைத்தனர். பாட்டில் வாங்க வந்த குடிபிரியர்கள், இப்பவே கடையை மூடிட்டாங்களே என புலம்பி சென்றனர்.
