ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை..!

கோவை காரமடை சீலியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆடுகளை சிறுத்தை அவ்வப்போது வேட்டையாடி வருவதாக தெரிகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சிறுத்தை இதுவரை பிடிக்கப்படவில்லை. சிறுத்தை தொடர்ந்து ஆடுகளை கொன்று தின்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மஸ்தான் என்பவரின் பட்டியில் இருந்த ஆடுகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க சொல்லி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அங்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூண்டு வைத்தால் அதில் சிறுத்தை சிக்குவதில்லை. எனவே வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *